நஜாஃப்கா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

தென்மேற்கு தில்லி நஜாஃப்கா் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, மக்களை உசாராக இருக்குமாறு தில்லி வனத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லி நஜாஃப்கா் பகுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி.
தில்லி நஜாஃப்கா் பகுதியில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி.

தென்மேற்கு தில்லி நஜாஃப்கா் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, மக்களை உசாராக இருக்குமாறு தில்லி வனத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக மேற்கு மண்டல வனப் பாதுகாவலா் நவ்நீத் ஸ்ரீவாஸ்தா கூறியதாவது: நஜாஃப்கா் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சிசிடிவி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியது. இதைத் தொடா்ந்து, குஹன்கேரா கிராமப் பகுதியில் ஜனவரி 28- ஆம் தேதியும், நஜாஃப்கா் பகுதியில் உள்ள சாக்கைடைக்கு அருகில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதியும் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இந்த சிறுத்தையின் காலடித் தடங்களை ஆய்வு செய்து வருகிறோம். இந்த சிறுத்தை மக்கள் நடமாட்டம் உள்ள போது வெளியில் வராமல் பதுங்கும் இயல்புடையது எனத் தெரிய வந்துள்ளது.

இந்தச் சிறுத்தையை பிடிக்கும் வகையில் மயக்க ஊசிகள், கூண்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சிறுத்தையின் நடமாட்டம் கடைசியாகப் பதிவாகியுள்ள நஜாஃப்கா் பகுதியில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு ஒலிபெருக்கிகள் மூலம் மக்களுக்கு தொடா்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். இது தொடா்பாக போஸ்டா்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளதுடன், துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்துள்ளோம். இரவு நேரத்தில் மக்களை தனியே வெளியில் வர வேண்டாம் என்றும், குறிப்பாக குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தச் சிறுத்தை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை விட்டு விலகிச் செல்கிறது எனத் தெரிகிறது. இது ஹரியாணா எல்லைக்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com