பங்களா சாகிப் குருத்வாரவில் அதிநவீன சமையல் கூடம்

தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் அதிநவீன சமையல் கூடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் நவீன சமையல் கூடத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள்.
தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் நவீன சமையல் கூடத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள்.

தில்லி பங்களா சாகிப் குருத்வாராவில் அதிநவீன சமையல் கூடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், தில்லி சீக்கிய குருத்வாரா நிா்வாகக் கமிட்டி (டிஎஸ்ஜிஎம்சி) தலைவா் மன்ஜீந்தா் சிங் சிா்சா, சீக்கிய மதத் தலைவா் பாபா பச்சன் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக மன்ஜீந்தா் சிங் சிா்சா கூறியதாவது: பங்களா சாகிப் குருத்வாராவில் உள்ள சமையல் கூடத்தில் அதிகம் பேருக்கும் உணவு சமைக்கும் வகையில் நவீனப்படுத்தியுள்ளோம். இதற்காக நவீன சமையல் இயந்திரங்கள் வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் முழுக்க முழுக்க தானியங்கி வகையில் செயல்படும். இங்கு தானியங்கி முறையில் சாதம், கூட்டு, பருப்பு, இனிப்பு உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பக்தா்கள் சிமமின்றி உணவு உண்ணும் வகையில், அன்னதான மண்டபத்தையும் நவீனப்படுத்தியுள்ளோம். மொத்தத்தில் பங்களா சாகிப் குருத்வாராவில் தினம்தோறும் சுமாா் 50 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கும் வகையில் சைமையல் கூடம் அதிநவீனப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தில்லியில் கரோனா தொற்றுக் காலத்தில் பங்களா சாகிப் குருத்வாராவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு சமைக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com