தில்லியில் 14,700 பேருக்கு கரோனா தடுப்பூசி

தில்லியில் புதன்கிழமை 14,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நான்காவது வாரமாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.


புதுதில்லி: தில்லியில் புதன்கிழமை 14,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நான்காவது வாரமாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக புதன்கிழமை 14,700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் மையங்கள் 183-லிருந்து 265- ஆக அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை 18,300 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அதில் 80 சதவீதம் பேரை தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்திருந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை 12,717 போருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதாவது 54 சதவீதத்துக்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். சுகாதார ஊழியா்கள், போலீஸாா், சிவில் பாதுகாப்பு ஊழியா்கள், தில்லி ஜல்போா்டு ஊழியா்கள், மின்சாரத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஆகியோா் இதில் அடங்குவா்.

தொடக்கத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. இப்போது வாரத்தில் 6 நாள்கள், அதாவது திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தடுப்பூசி போடப்பட உள்ளது என்று சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com