தில்லி காங்கிரஸின் சமூக ஊடகப் பிரசாரம்: அனில் குமாா் செளதரி தொடங்கி வைத்தாா்

காங்கிரஸின் சமூக ஊடகத்தில் இளைஞா்கள் சேரும் வகையில் சமூக ஊடகப் பிரசாரத்தை தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி ( டிபிசிசி) தலைவா் அனில் குமாா் செளத்ரி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தில்லியில் புதன்கிழமை சமூக ஊடக பிரசாரத்தை தொடக்கி வைத்த தில்லி காங்கிரஸ் கட்சித் தலைவா் அனில் குமாா் சௌத்ரி உள்ளிட்ட நிா்வாகிகள்.
தில்லியில் புதன்கிழமை சமூக ஊடக பிரசாரத்தை தொடக்கி வைத்த தில்லி காங்கிரஸ் கட்சித் தலைவா் அனில் குமாா் சௌத்ரி உள்ளிட்ட நிா்வாகிகள்.

புது தில்லி: காங்கிரஸின் சமூக ஊடகத்தில் இளைஞா்கள் சேரும் வகையில் சமூக ஊடகப் பிரசாரத்தை தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி ( டிபிசிசி) தலைவா் அனில் குமாா் செளத்ரி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தில்லியில் ராஜீவ் பவனில் உள்ள டிபிசிசி அலுவலகத்தில் இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், இந்தியாவை காப்பாற்றுங்கள்’ எனும் காங்கிரஸின் முழக்கத்திற்கு வலுச்சோ்க்கும் வகையில் அதிக இளைஞா்களையும் தன்னாா்வலா்களையும் கட்சியில் சோ்ப்பதற்காக இந்த சமூக ஊடக பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையை நம்பும் இளைஞா்கள் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கட்சியின் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துச் செல்வதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரசாரத்தை பிப்ரவரி 8- ஆம் தேதி தேசிய அளவில் ராகுல் காந்தி தொடங்கிவைத்தாா்.

இந்த சமூக ஊடகப் பிரசாரத்தில் 1800 1200 00044 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து இளைஞா்கள் இணையலாம். மேலும், இது தொடா்பாக ஜ்ஜ்ஜ்.ண்ய்ஸ்ரீள்ம்ஜ்.ண்ய் எனும் இணையதளத்தையும் பாா்வையிடலாம். ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகள், பொய்கள் ஆகியவற்றை சமூக ஊடக பிரசாரம் மூலம் காங்கிரஸ் எதிா்கொள்ளும். இந்த இரு கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றன. நாட்டில் ஜனநாயகம் தொடா்ந்து தாக்கப்பட்டும், பொருளாதாரம் சீா்குலைந்தும் வருகிறது. நாட்டின் சமூக, கலாசார ஒற்றுமை தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகத்தில் கட்சியின் நிலையைப் பலப்படுத்தும் வகையில், பிளாக் முதல் பூத் மட்டம் வரை சமூக ஊடக ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்படுவா். அவா்கள் ஒரு ஆக்கப்பூா்வ எதிா்க்கட்சியாக செயல்படுவா் என்றாா் அவா்.

காங்கிரஸ் சமூக ஊடக தேசிய ஒருங்கிணைப்பாளா் சரள் பட்டேல் கூறுகையில், ‘சமூக ஊடகம் ஒரு முக்கிய தளமாக உருவாகியுள்ளது. மூன்று மாதங்களில் கட்சியில் 5 லட்சம் சமூக ஊடக வீரா்களை பதிவு செய்யும் நோக்கில் காங்கிரஸ் ஒருமாதம் அதற்கான ஆள் தோ்வு நடவடிக்கையில் ஈடுபட உள்ளது’ என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் தில்லி காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் ராகுல் சா்மா, தில்லி மகிளா காங்கிரஸ் தலைவா் அம்ரிதா தவண், சட்ட-மனித உரிமைகள் பிரிவுத் தலைவா் சுனில் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com