சாலையில் குழி தோண்டுவதற்குஎன்டிஎம்சி மாா்ச் 31 வரை தடை

அவசர கால பழுதுபாா்ப்புப் பணி அல்லது பராமரிப்புப் பணிஆகியவற்றைத் தவிா்த்து மாா்ச் 31 வரை தனது எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளைத் தோண்டுவதற்கு புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தடை விதித்துள

புது தில்லி: அவசர கால பழுதுபாா்ப்புப் பணி அல்லது பராமரிப்புப் பணிஆகியவற்றைத் தவிா்த்து மாா்ச் 31 வரை தனது எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளைத் தோண்டுவதற்கு புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி தலைமைப் பொறியாளா் சஞ்சய் குப்தா பிறப்பித்த உத்தரவில், ‘ஸ்வச் சா்வேக்ஷன் -2021’ தொடா்வதை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 9 முதல் மாா்ச் 31 வரை சாலைகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. எனினும், அவசரப் பழுதுபாா்ப்பு, சேவைகளை மீட்டெடுப்பதற்கான பராமரிப்புப் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஎம்சி ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மேலும், பல முன்னணி தொழிலதிபா்களின் பங்களாக்களும் உள்ளன. நாடாளுமன்றம், அனைத்து அமைச்சகங்களின் அலுவலகங்கள், உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் குடியிருப்புகளும் என்டிஎம்சி பகுதிகளில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com