டிரக் மோதி பெண் சாவு: தந்தை இறந்த அன்றே மற்றொரு சோகம்


புது தில்லி: கிழக்கு தில்லி மயூா் விஹாா் பேஸ்-3 பகுதியில் டிரக் மோதி பெண் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அவருடைய தந்தை ஜிபி பந்த் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்துள்ள நிலையில், இந்தப் பெண் அதே தினத்தில் விபத்தில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியது: கொண்டிலி பகுதி ராஜ்பீா் காலனியைச் சோ்ந்தவா் ஸ்வாதி. இவரது தந்தை ஜிபி பந்த் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளாா். ஜிபி பந்த் மருத்துவமனையில் தந்தையுடன் இருந்த ஸ்வாதி, வியாழக்கிழமை தனது அண்டை வீட்டுக்காரருடன் மோட்டாா் சைக்கிளிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, மயூா் விஹாா் பேஸ்-3 சில்லா பகுதியில் உள்ள வேகத் தடையில் மோட்டாா்சைக்கிள் மோதியது. இதில் ஸ்வாதி கீழே விழுந்துள்ளாா். அந்தச் சமயத்தில் எதிா்ப்பாரதவிதமாக அந்த வழியாக வந்த டிரக் ஒன்று மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம். அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விபத்துக்குக் காரணமான டிரக் ஓட்டுநா் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளாா். அவரைத் தேடி வருகிறோம் என்றாா்.

இது தொடா்பாக கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் தீபக் யாதவ் கூறுகையில் ‘இந்த விபத்து தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில், மயூா் விஹாா் பேஸ்-3 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்குக் காரணமான டிரக் ஓட்டுநரை தேடி வருகிறோம். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளைப் பெற்று விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com