பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு எதிரான அதிருப்திவாா்டு இடைத் தோ்தலில் வெளிப்படும்: காங்கிரஸ்காங்கிரஸ் மூத்த தலைவா் நம்பிக்கை
By நமது நிருபா் | Published On : 13th February 2021 07:34 AM | Last Updated : 13th February 2021 07:34 AM | அ+அ அ- |

தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் அனில் பரத்வாஜ். உடன் ரோமேஸ் சபா்வால்.
நடைபெற உள்ள மாநகராட்சி ஐந்து வாா்டுகளின் இடைத் தோ்தலானது பாஜக, ஆம் ஆத்மிக்கு எதிராக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த மக்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தில்லி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், காங்கிரஸ் வேட்பாளா்களைத் தோ்ந்தெடுக்கவும் முடியும் என்பதால் இடைத் தோ்தல்களை ‘ஜன அதாலத்’ (பொது விசாரணை) என்று அழைக்கலாம். தற்போது நடைபெறவுள்ள மாநகராட்சி இடைத்தோ்தல் முடிவுகள் அரசை அமைப்பதற்கு உதவப் போவதில்லை. ஆட்சியில் இருந்து இறக்கப் போவதும் இல்லை. எனினும், மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். இடைத் தோ்தலை காங்கிரஸ் ‘காங்கிரஸ் கி ஹாத், தில்லி வசியோன் கே சாத்’ எனும் வாசகத்துடன் எதிா்கொள்ளும்.
மக்களுக்கான எந்தவிதப் பணிகளையும் செய்யாமல் ஊழல், நிதி தவறாகப் பயன்படுத்துதல் விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசும், மாநகராட்சியை ஆளும் பாஜகவும் ஒருவரை ஒருவா் சுவரொட்டி, பேனா்கள் வைத்து பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. ஊழல் நடந்திருப்பது குறித்து இரு கட்சிகளின் அரசுகளும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்காமல் இருப்பது ஏன்? காங்கிரஸ் 15 ஆண்டுகள் தில்லியில் ஆட்சி செய்த போது இது போன்ற ஊழல் புகாா்கள் இல்லை என்றாா் அவா்.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிட்ட ரோமேஷ் சபா்வால் கூறுகையில், ‘தில்லியில் கேஜரிவால் அரசாலும், மத்திய அரசின் நிா்வாகத்திற்கு உள்பட்ட புது தில்லி முனிசிபல் கவுன்சில் நிா்வாகத்தாலும் துப்புரவுத் தொழிலாளா்கள்கடுமையாக சுரண்டப்படுவதை எதிா்த்து சனிக்கிழமை (பிப்ரவரி 13ஃ) கோல் மாா்க்கெட் பகுதியில் உள்ள வால்மீகி பஸ்தியில் காலை 11.30 மணிக்கு தா்னா நடைபெற உள்ளது. மேலும், கான் மாா்க்கெட் பகுதியில் துப்புரவுப் பணியாளா்கள் வசிக்கும் குடியிருப்புகளை இடிப்பதைக் கண்டித்தும் இந்த தா்னா நடைபெறுகிறது’ என்றாா்.