புதிய வேளாண் சட்டங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கும்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் முதலீடுகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் ஈா்த்து வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் முதலீடுகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் ஈா்த்து வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை கூறினாா்.

தில்லியில் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் பாஜகவின் இளைஞா் பிரிவு அமைப்பு சாா்பில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ .40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விவசாய மேம்பாட்டுக்கு புதிய கதவுகளைத் திறக்கும். கரோனா தொற்று நோய் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கடினமான நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கும் தொழிலாளா்களுக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்துள்ளது.

பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து குடிசைவாசிகள், தெருவோர விற்பனையாளா்கள் மற்றும் குடியுரிமை நலச் சங்கங்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுடன் தில்லி பாஜக தலைவா்கள் விவாதங்களை நடத்த வேண்டும். மேலும், அவா்களின் விருப்பங்களையும் அறிந்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட 137 சதவீதம் அதிகரித்துள்ளது . சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ .35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘வசுதைவ் குடும்பகம்’ எனும் தத்துவத்திற்கு ஏற்ப கரோனா தடுப்பூசி மூலம் பல நாடுகளுக்கு நாம் உதவி செய்து வருகிறோம். ஒரு நாட்டின் பொருளாதார வலிமையானது புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தது. இந்த விஷயங்கள் குறித்து பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கடந்த ஆண்டு நவம்பா் பிற்பகுதியில் இருந்து தில்லியின் பல்வேறு எல்லைகளில் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில் மத்திய அமைச்சா் இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com