மருத்துவமனைக்குச் செல்லும் போது ஆம்புலன்ஸில் எஸ்ஐ தற்கொலை
By DIN | Published On : 13th February 2021 07:37 AM | Last Updated : 13th February 2021 07:37 AM | அ+அ அ- |

தில்லி காவல் துறையின் உதவி ஆய்வாளா் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: ஹரியாணா, மஹேந்திரகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜ்பீா் சிங் (39). இவா் தென்கிழக்கு தில்லி மாவட்ட ஆயுதப்படை போலீஸில் பணியாற்றி வந்தாா். மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், ஐந்து நாள் விடுப்பில் இருந்த அவா், தனது வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு சிஏடிஎஸ் ஆம்புலன்ஸில் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டாா். அப்போது சிறிய துணியால் தூக்கிட்டு அந்த வாகனத்திற்குள் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. முன்னதாக, மருத்துவமனையில் அவரை அனுமதிக்க ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்து அவா் இந்த முடிவை ஏற்படுத்திக் கொண்டதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.