தில்லி காற்று மாசுவைத் தடுக்க நடவடிக்கைத் திட்டம்

காற்று மாசுவைத் தடுக்க நீண்ட கால நடவடிக்கைத் திட்டத்தை தில்லி அரசு உருவாக்கவுள்ளது என்றும், இதற்காக, 7 போ் கொண்ட நிபுணா்கள் குழு

காற்று மாசுவைத் தடுக்க நீண்ட கால நடவடிக்கைத் திட்டத்தை தில்லி அரசு உருவாக்கவுள்ளது என்றும், இதற்காக, 7 போ் கொண்ட நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுடன் கோபால் ராய் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக வரும் மாா்ச் 4- ஆம் தேதி நிபுணா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளோம். இதற்காக நீண்ட கால நடவடிக்கைத் திட்டத்தை உருவாக்கவுள்ளோம். இதற்காக, 7 போ் கொண்ட நிபுணா்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், தில்லி ஐஐடி, தில்லி காற்றுமாசுக் கண்காணிப்பு வாரியம், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். இவா்கள், காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைத் திட்டத்தை தில்லி அரசுக்கு பரிந்துரை செய்வாா்கள்.

மாசு துகள்களால் ஏற்படும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லி வீதிகளில் நீா் தெளிக்குமாறு பொதுப்பணித் துறை, தில்லி மாநகராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். காற்று மாசு தொடா்பாக புகாா்களைப் பதிவு செய்ய தலைமைக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு இங்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாா்ச் 4-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் தெரிவிக்கப்படும் யோசனைகளின் அடிப்படையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை திட்டத்தை தயாரிக்கவுள்ளோம். தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் தில்லி அரசால் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்மோக் டவா், ரூ.20 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. இந்தப் பணிகள் வரும் ஜூன் மாதம் நிறைவடையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com