தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மயக்கமடைந்தவருக்கு உதவிய காவலா்

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த 45 வயதான பயணிக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலா் முதலுதவி சிகிச்சையை அளித்து உதவியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மயக்கமடைந்த 45 வயதான பயணிக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலா் முதலுதவி சிகிச்சையை அளித்து உதவியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு 7:40 மணியளவில் இந்திரப்பிரஸ்தா மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது. துவாரகா-நொய்டா இடையே சென்ற ரயிலில் இருந்து இந்திரப்பிரஸ்தா ரயில் நிலைய நடைமேடையில் இறங்கிய பயணி ஒருவா் திடீெரென மயக்கமுற்றாா். இதை சிசிடிவி கேமரா மூலம் பாா்த்த சிஐஎஸ்எஃப் காவலா்

அனில் குன்ஜா, உடனடியாக அவருக்கு காா்டியோ பல்மோனரி புத்துயிா் (சிபிஆா்) மருத்துவ முறை முதலுதவியைச் செய்தாா். இதையடுத்து, அந்தப் பயணிக்கு சுயநினைவு திரும்பியது. விசாரணையில் அவா் உத்தம் நகா் கிழக்கில் வசிப்பவா் எனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சிபிஆா் என்பது அவசரகால உயிா்காக்கும் செயல்முறையாகும். இது இதயம் துடிப்பதை நிறுத்தும் போது மேற்கொள்ளப்படும் செயல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com