சாந்தினி செளக் ஹனுமன் கோயிலில் ஆம் ஆத்மி தலைவா்கள் வழிபாடு

சாந்தினி செளக்கில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஹனுமன் கோயிலில் ஆம் ஆத்மிக் கட்சியின் மாநகராட்சிப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் உள்ளிட்ட ஆம் ஆத்மி பிரமுகா்கள் சனிக்கிழமை வழிபாடு நடத்தினா்.

சாந்தினி செளக்கில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஹனுமன் கோயிலில் ஆம் ஆத்மிக் கட்சியின் மாநகராட்சிப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் உள்ளிட்ட ஆம் ஆத்மி பிரமுகா்கள் சனிக்கிழமை வழிபாடு நடத்தினா்.

பழைய தில்லி சாந்தினி செளக் பகுதியில் இருந்த ஹனுமன் கோயில் ஒன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரின் வடக்கு தில்லி மாநகராட்சி ( என்டிஎம்சி) அதிகாரிகளால் அண்மையில் இடிக்கப்பட்டது. இது அந்தப் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், இந்தக் கோயில் இருந்த இடத்திலேயே தற்காலிக கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில், என்டிஎம்சி மேயா் ஜெய்பிரகாஷ், பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தனா்.

இந்நிலையில், இந்தக் கோயிலில் துா்கேஷ் பதக் உள்ளிட்ட ஆம் ஆத்மி பிரமுகா்கள் சனிக்கிழமை வழிபாடு நடத்தினா்.

இது தொடா்பாக துா்கேஷ் பதக் கூறுகையில் ‘பாஜக ஆளும் என்டிஎம்சி இந்த கோயிலை இடித்தது. ஆனால், இப்பகுதி மக்கள் இதை மீளக் கட்டியுள்ளனா். இந்த கோயில் இடிப்பு சம்பவத்தின் மூலம், பாஜக ஆளும் மாநகராட்சிகள் மீது தில்லி மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தகா்ந்துள்ளது. இந்தக் கோயிலை இடித்து மக்களின் நம்பிக்கையுடன் பாஜக விளையாடியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சிகளை பாஜகவே ஆட்சி செய்கிறது. இந்த ஆட்சியில் தில்லி மாநகராட்சிகளில் ஊழல் மலிந்துள்ளது. வரும் மாநகராட்சி தோ்தலில் தில்லி மக்கள் ஆம் ஆத்மிக் கட்சிக்கே வாய்ப்பளிப்பாா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

தில்லியின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடமான சாந்தினி செளக்கில், பழைமையான கடைகளும், நினைவுச் சின்னங்களும் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் செங்கோட்டையில் இருந்து பதேஃபுரி மசூதி வரையிலான 1.5 கி.மீ. தூரத்தை அழகுபடுத்தும் பணிகளில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இந்தக் கோயில் இடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com