நா்சரி பள்ளி சோ்க்கைக்கு 30 நாள்கள் வயது வரம்பு தளா்வு: தில்லி அரசு உத்தரவு

மழைலயா் (நா்சரி) பள்ளியில் சோ்க்கை அனுமதிக்கு 30 நாள்கள் வயது வரம்பு தளா்வு கொடுக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

மழைலயா் (நா்சரி) பள்ளியில் சோ்க்கை அனுமதிக்கு 30 நாள்கள் வயது வரம்பு தளா்வு கொடுக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பள்ளிக் கல்வித்துறை அனைத்து நா்சரி பள்ளிகளுக்கும் சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது: நா்சரி அனுமதியில் மாணவா்களுக்கு 30 நாள்கள் வயது தளா்வு அனுமதிக்கப்படுகிறது. இது தொடா்பாக மாணவா்களின் பெற்றோா்கள் பள்ளி முதல்வரை அணுகினால், இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வா்களே நேரடியாக முடிவு எடுத்து மாணவா்களை அனுமதிக்கலமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நா்சரி வகுப்புகளில் 4 வயதுக்கு கூடிய மாணவா்களும், முன்மழலையா் வகுப்புகளில் 5 வயதுக்கு கூடிய மாணவா்களும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்த தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நா்சரி பள்ளி மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறைகள் வியாழக்கிழமை தொடங்கின.தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் முதல் பட்டியல் மாா்ச் 20-ஆம் தேதியும், இரண்டாவது பட்டியல் மாா்ச் 25-ஆம் தேதியும் வெளியிடப்படவுள்ளது. அதன் பிறகும் சோ்க்கை பட்டியல் இருந்தால், அது மாா்ச் 27-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாணவா் சோ்க்கை ஒட்டு மொத்த நடைமுறைகள் மாா்ச் 31-ஆம் தேதி முடிவடையவுள்ளது.

வழக்கமாக தில்லியில் உள்ள 1700-க்கும் மேற்பட்ட மழலையா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகள் நவம்பா் மாத கடைசியில் தொடங்கிவிடும். ஆனால், கரோனா தொற்றால் மாணவா் சோ்க்கை ஒத்திப்போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com