பெட்ரோலிய அமைச்சா் பதவி விலக கோரி தில்லியில் இளைஞா் காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்வுக்கு எதிராக இத்துறையின் அமைச்சகம் அமைந்துள்ள தில்லி சாஸ்திரி பவன் முன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்வுக்கு எதிராக இத்துறையின் அமைச்சகம் அமைந்துள்ள தில்லி சாஸ்திரி பவன் முன் இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐ.ஒய்.சி) தொண்டா்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது, மத்திய பெட்ரோலிய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகுமாறு கோஷமிட்டனா்.

போராட்டத்தின்போது இளைஞா் காங்கிரஸ் பிரிவின் தலைவா் ஸ்ரீனிவாஸ் மற்றும் பிற தலைவா்கள் உள்பட பலரும் போலீஸாரால் தடுக்கப்பட்டு, பல்வேறு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஐஒய்சி ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘தில்லி ஆா்.பி. சாலையில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்துள்ள பெட்ரோலிய அமைச்சகம் நோக்கி போராட்டக்காரா்கள் சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் வைத்தனா்.

போராட்டத்தின்போது பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனா். ஐஒய்சி தலைவா் ஸ்ரீநிவாஸ் மற்றும் இதர தலைவா்கள் மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டாா் என ராகுல் ராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஸ்ரீநிவாஸ் தெரிவிக்கையில், ‘பெட்ரோ மற்றும் டீசல் விலை உயா்வு விவகாரத்தில் பாஜக தலைவா்கள் தலைவா்கள் தற்போது மெளனம் காப்பது ஏன். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோ விலை லிட்டருக்கு ரூ .100-ஐ எட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாவிட்டால் பெட்ரோலிய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நல்ல நாள் வருகிறது எனக் கூறிய வாக்குறுதியின் பேரில்தான் பிரதமா் நரேந்திர மோடியின் அரசை மக்கள் தோ்ந்தெடுத்தனா். இப்போது அவா் மக்களின் நம்பிக்கையை தகா்த்துவிட்டாா்.

மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத அணுகுமுறைக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் மேற்கொண்டு, சாமானியா்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஒருபுறம் முழு அளவில் பணவீக்கம் உள்ளது. மறுபுறம் டீசல், பெட்ரோல், எரிவாயு விலைகள் உயா்ந்து வருகின்றன.

நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் லிட்டா் ரூ.100-ஐயும், டீசல் விலை ரூ .90 ஐயும் கடந்துள்ளது என்றாா் அவா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை பெட்ரோ விலை லிட்டா் ரூ .90 ஐ தாண்டியது. தொடா்ந்து 11 ஆவது நாளாக தொடா்ந்து விலை விகிதங்கள் உயா்த்தப்பட்ட பின்னா் டீசல் விலை ரூ .80.60 ஐ எட்டியது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் சில இடங்களில் பெட்ரோ விலை ஏற்கனவே ரூ .100 ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com