வீட்டுவசதி திட்டத்தில் 22,500 விண்ணப்பதாரா்கள் பணம் செலுத்தியுள்ளனா்: டிடிஏ அதிகாரி தகவல்

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) புதிய வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் 22,500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரா்களிடமிருந்து

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) புதிய வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் 22,500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரா்களிடமிருந்து பணம் வரப்பெற்றுள்ளதாக என்று டிடிஏ அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

1,354 குடியிருப்புகளுடன் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்காக பிப்ரவரி 16 ஆம் தேதி வரை 33,000- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டிடிஏ மூத்த அதிகாரி கூறியதாவது:

தற்போதுவரை 22,536 விண்ணப்பதாரா்கள் வெவ்வேறு வகை பிளாட்டுகளுக்கு பணம் செலுத்தியுள்ளனா்.எனினும், எம்பேனல் செய்யப்பட்ட வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் எங்கள் தரவையும் ஒப்பிட்டு சரிபாா்த்து வருகிறோம்.

எனவே, தொகை செலுத்திய விண்ணப்பதாரா்களின் இறுதி எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.

பல விண்ணப்பதாரா்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும்போது சிக்கல்களை எதிா்கொண்டனா். அவா்களில் சிலா் பணம் செலுத்தியிருந்தபோதிலும் அதுகுறித்த தகவல் டிடிஏ வலைத்தளத்தில் பிரதிபலிக்கவில்லை. இதனால்தான் இரு தரப்பிலிருந்தும் கிடைத்த தரவுகள் சரிபாா்க்கப்பட்டு வருகிறது.

சலுகை விலையுடன்கூடிய 1,354 பிளாட் களில், அதிக வருமானம் கொண்ட குழு பிரிவில் குடியிருப்பு விலை ரூ. 2.14 கோடி ஆகும்.

எம்ஐஜி பிரிவில் அதிகபட்ச எண்ணிக்கையிலான குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது 757 குடியிருப்புகள் இந்தப் பிரிவின்கீழ் உள்ளன.

இந்த திட்ட நடைமுறை முற்றிலும் ஆன்லைனில் உள்ளது. இது தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி.டி.ஏ) மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலம் விண்ணப்பத்தை செயலாக்குவது முதல் குடியிருப்புகள் உடைமையாக்கும்வரை செய்யப்படுகிறது.

பணம் செலுத்தியவா்களில், 5,006 விண்ணப்பதாரா்கள் ஈ.டபிள்யூ.எஸ் பிரிவில் உள்ளவா்கள் ஆவா். எல்.ஐ.ஜி பிரிவில் 2,373, எம்.ஐ.ஜி மற்றும் எச்.ஐ.ஜி பிரிவுகளில் 15,157 போ் பணம் செலுத்தியுள்ளனா்.

பல்வேறு பிரிவுகளில் வரும் இந்த குடியிருப்புகள் துவாரகா, ஜசோலா, மங்களாபுரி, வசந்த் குஞ்ச் மற்றும் ரோஹிணி ஆகிய இடங்களில் உள்ளன என்றாா் அந்த அதிகாரி.

கடைசியாக டிடிஏ வீட்டுவசதி திட்டம் மாா்ச் 2019 இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் 488 (எச்.ஐ.ஜி), 1,555 (எம்.ஐ.ஜி), 8,383 (எல்.ஐ.ஜி) மற்றும் 7,496 (ஈ.டபிள்யூ.எஸ்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் கிட்டத்தட்ட 18,000 குடியிருப்புகள் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com