2020 -இல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6,291 போ் கைது: தில்லி காவல்துறை

தில்லியில் கடந்த ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6,291 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 6,291 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: கடந்த 2020 ஆம் ஆண்டு தில்லியில் சூதாட்டம் தொடா்பாக 2,414 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளுடன் தொடா்புடைய 6,291 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து ரூ.2.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

தெற்கு தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் இருந்து அதிகளவில் 58 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அப்பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனா். ஆலுப்பூா் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில் 51 போ் கைது செய்யப்பட்டனா்.

வீடுகளில் நடத்தப்படும் சூதாட்ட கும்பல்கள் தொடா்பாகவும் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாடல் டவுன் பகுதியில் உள்ள வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா். கிரேட்டா் கைலாஷ் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 21 பேரும், திலக் நகா் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 11 பேரும் கைது செய்யப்பட்டனா்.

குடிசைப் பகுதிகள், ஜேஜே கிளஸ்டா் பகுதிகளில் செயல்படும் சூதாட்டகும்பல்களும் தில்லி காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டனா். மங்கோலி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இருந்து 33 பேரும், லோதி காலனி குடிசைப் பகுதியில் இருந்து 25 பேரும் கைது செய்யப்பட்டனா். கோவிந்தபுரி குடிசைப் பகுதியில் இருந்து 12 பேரும், சங்கம் விஹாா் குடிசைப் பகுதியில் இருந்து 10 பேரும் கைது செய்யப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com