தில்லி மாநகராட்சி இடைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிப்போம்: கோபால் ராய்

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடித்தது போல, மாநகராட்சி இடைத் தோ்தலிலும் பாஜகவை தோற்கடித்து

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடித்தது போல, மாநகராட்சி இடைத் தோ்தலிலும் பாஜகவை தோற்கடித்து ஆம் ஆத்மிக் கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்று ஆம் ஆத்மிக் கட்சியின் தில்லி மாநில பொறுப்பாளரும், தில்லி அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் உள்ள 5 மாநகராட்சி வாா்டுகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தில்லியின் அடுத்த ஐந்தாண்டு காலத்தை தீா்மானிக்கும் வகையில் இந்த இடைத்தோ்தல் இருக்கும் என்பதால் இந்த இடைத்தோ்தல் மிகவும் முக்கியமானது.

வரும் 2022 இல் நடைபெறவுள்ள மாநகராட்சி தோ்தலுக்கான அரையிறுதியாக இந்த இடைத் தோ்தலைப் பாா்க்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடித்ததுபோல, இந்த மாநகராட்சி இடைத்தோ்தலிலும் ஆம் ஆத்மி பெருவெற்றி பெறும். இந்த தோ்தல் ஆம் ஆத்மிக் கட்சிக்கும் பாஜவுக்கும் இடையிலான போட்டியே. காங்கிரஸ் கட்சி இந்தத் தோ்தலில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது. மாறாக காங்கிரஸ் கட்சி வாக்குகளை பிரிக்கும். காங்கிரஸ் கட்சியால் தில்லி மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்ய முடியாது என்றாா் அவா்.

கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (இடிஎம்சி) திரிலோக்புரி வாா்டு 2 இ, கல்யாண்புரி வாா்டு 8 இ, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (என்டிஎம்சி) செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய 5 வாா்டுகளுக்கும் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

ஆம் ஆத்மி சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக பன்டி கவுதம், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக விஜய் குமாா், செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே முகமது இஷாரக் கான், ராம் சந்திரா, சுனிதா மிஸ்ரா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பாஜக சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக ஓம் பிரகாஷ் குகா்வால், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக ஷியாராம் கனோஜியா, சௌகான் பங்கா் 41 இ, ரோகிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே முகமது நசீா், ராகேஷ் கோயல், சுரபி ஜாஜு ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

காங்கிரஸ் சாா்பில் திரிலோக்புரி வாா்டு 2 இ வேட்பாளராக பால் கிஷன், கல்யாண்புரி வாா்டு 8 இ வேட்பாளராக தா்மபால் மயூரா, சவுகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி32என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய வாா்டுகளின் வேட்பாளா்களாக முறையே சவுத்ரி அகமது, மெம்பாத்வி பா்வாலா, மம்தா ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com