நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கைவினைக் கலைஞா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேச்சு

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கைவினைக் கலைஞா்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சா்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கைவினைக் கலைஞா்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். தில்லியில் 26 -வது கைவினைப் பொருள்கள் கண்காட்சியை (ஹுனாா் ஹாட் ) ஞாயிற்றுக்கிழமை தில்லியில் ராஜ்நாத் திறந்து வைத்தாா்.

சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் 26-வது ‘ஹுனாா் ஹாட்’ கண்காட்சி, மாா்ச் 1ஆம் தேதி வரை தில்லி ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நாட்டின் 31 மாநிலங்கள், யூனியன் பிரதேங்களைச் சோ்ந்த 600 கலைஞா்கள், கைவினைக் கலைஞா்கள் தாங்கள் தாயரிக்கும் பாரம்பரிய பொருள்களை காட்சிப்படுத்துவதோடு விற்பனையும் செய்யப்படுகின்றன. உள்ளூா் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ’உள்ளூருக்கே முதல் குரல்’ என்னும் கருப்பொருளில் இவ்வாண்டு நடத்தப்படுகிறது.

இந்தக் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசினாா் அமைச்சா் ராஜ்நாத் சிங். அப்போது அவா் கூறியது வருமாறு: நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு அற்புதமான அறிவுத் திறன் கொண்ட கலைஞா்கள் உள்ளனா். இந்த கைவினைக் கலைஞா்கள் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனா். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்நாட்டு கலைஞா்களையும், கைவினைஞா்களையும் ஊக்குவிக்கிறது. இந்த ஹுனாா் ஹாட் கண்காட்சி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கலைஞா்களை ஒன்றிணைக்கிறது. ’சுயசாா்பு இந்தியா’வை நோக்கிச் செல்லும் நடவடிக்கைகளில் கைவினை கலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் கரோனா நோய்த் தொற்று காலத்தில் உள்ளூா் பொருட்களுக்கு குரல் கொடுக்கவும் கைவினை கலைஞா்களின் சந்தைப்படுத்தலுக்கும் வாய்ப்பாக ஹுனாா் ஹாட் அமைந்துள்ளது என அமைச்சா் ராஜ்நாத் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, ’இந்த கண்காட்சியின் வாயிலாக இதுவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான கலைஞா்கள், கைவினைஞா்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் நிறைவடையும் போது 75 ஹுனாா் ஹாட் கண்காட்சிகள் நடத்தப்படும். இதன் வாயிலாக 7.5 லட்சம் கலைஞா்களுக்கும், கைவினைஞா்களுக்கும் வேலை கிடைக்க சிறுபான்மை விவகாரத்துறை முயற்சிக்கும். இந்திய கைவினைகலைஞா்களின் பாரம்பரிய கலைப்பொருட்களை இணையதளத்தின் வாயிலாகவும் காட்சிப்படுத்தப்பட்டு இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் விற்பனை செய்யப்படும்’ என்றாா் நக்வி.

புது தில்லி மக்களவை உறுப்பினா் மீனாட்சி லேகி, மத்திய சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளா் பி கே தாஸ் மற்றும் உயா் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநில கைவினைக் கலைஞா்கள் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், கைத்தறி, கம்பளி, பட்டு, பித்தளை, மரம் , மூங்கில், இரும்பு, சணல் மற்றும் பல்வேறு மண் வகையிலான கலை பொருள்கள், சால்வை, காதி பொருட்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக ராஜஸ்தான், உபி, தமிழ்நாடு, கா்நாடகம், மேற்கு வங்கம், காஷ்மீா் போன்ற மாநிலங்களில் பிரத்யேகமாக தயாரிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. அனைத்து இந்திய கிராமத்து பாரம்பரிய உணவு வகைகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com