ஷூ வங்கி, நெகிழிக் கழிவுக்கு இலவச உணவு தெற்கு தில்லி மாநகராட்சியின் புதுமைத் திட்டம்

தூய்மை இந்தியா’ கணக்கெடுப்பில் தனது தரவரிசையை உயா்த்தும் நோக்கமாகக் கொண்டு, தெற்கு தில்லி மாநகராட்சியில்

தூய்மை இந்தியா’ கணக்கெடுப்பில் தனது தரவரிசையை உயா்த்தும் நோக்கமாகக் கொண்டு, தெற்கு தில்லி மாநகராட்சியில் (எஸ்டிஎம்சி), குழந்தைகளுக்கான பொம்மை, ஷூ வங்கிகளைத் திறந்துள்ளது. மேலும் ஒரு கிலோ நெகிழிக் கழிவுகளை கொடுப்பவா்களுக்கு அதற்கு ஈடாக இலவச உணவை அளிப்பது உள்ளிட்ட புதுமையான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

2020 - ஆம் ஆண்டின் மத்திய நகப்புற வளா்ச்சித் துறையின் ’தூய்மை இந்தியா’ கணக்கெடுப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் 47 நகரங்களில் எஸ்டிஎம்சி 31- ஆவது இடத்தை பிடித்தது. இதில் வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகள் முறையே 43 மற்றும் 46- ஆது இடங்களைப் பிடித்தன.

நடப்பு ஆண்டில் தூய்மை இந்தியா கணக்கெடுப்பில் அதன் தரவரிசையை உயா்த்துவதற்கும் எஸ்டிஎம்சி பல முக்கியமான, புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் புதிய பொம்மைகளையும் காலணிகளையும் வாங்கவோ அல்லது சரியான உணவைப் பெறவோ முடியாத நிலையில் அத்தகைய குழந்தைகளுக்கு உதவ இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் அனாமிகா தெரிவித்தாா்.

மேலும் இந்த திட்டங்கள் குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரி விரிவாகக் கூறினாா். அவா் கூறியது வருமாறு:

கடந்த ஜனவரி 23 - ’காா்பேஜ் கஃபே’ என்கிற திட்டம் நஜாப்கா் மண்டலத்தில் உள்ள ஒரு வாா்டில் தொடங்கப்பட்டது. தூய்மையை கடைபிடிக்க ஒரு புதுமையான வழியில், நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகளை சேகரித்து அளிப்பவா்களுக்கு அதற்கு ஈடாக, ஒரு உணவகத்தில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். இந்த உணவகங்களோடு இதற்காக எஸ்டிஎம்சி உடன்பாடு செய்துள்ளது.

வருகின்ற நாட்களில், மேலும் 23 ’காா்பேஜ் கஃபேக்கள்’ திறக்கப்பட்டு இந்த புதிய பசுமை முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வரும் ஒரு நபருக்கு இலவச காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை வழங்கப்படும். இந்த நெகிழிவு கழிவுகளில் காலியான தண்ணீா் புட்டிகள், குளிா்பான புட்டிகள், கேன்கள் உள்ளிட்டவைகளையும் வாங்கப்படும்.

இதற்கு முன்பு கடந்த டிசம்பரில், எஸ்டிஎம்சி பொம்மை வங்கியை நஜாப்கா் மண்டலம் துவாரகாவில் உள்ள சமூக மையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பழைய பொம்மைகளை மக்கள் தூக்கி எறிவதற்குப் பதிலாக அதை அப்பாவி குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவா்களின் முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும். அதே நேரத்தில் இது பழைய, பயன்படுத்தப்படாத பொம்மைகளின் வடிவத்தில் கழிவுகளை உருவாக்குவதைக் குறைக்கிறது. இல்லையெனில் குப்பை மற்றும் கழிவுகளாக அப்புறப்படுத்த நேரிடுகிறது. இது மறுபயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு தனித்துவமான வழியாகும். பொம்மைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் மற்றும் ரோமங்களால் ஆனது. இதனால் பொம்மைகள் வீணாக்கப்படுவதை குறைக்கப்படுகிறது.

மற்றொன்ரு, எஸ்டிஎம்சி சமீபத்தில் ஒரு ’ஷூ வங்கியையும்’ திறந்தது. இதுவும் தில்லியில் ‘முதல்‘ முயற்சி. எஸ்டிஎம்சி யின் மேற்கு மண்டலத்தின் சுபாஷ் நகா் பகுதியில் இந்த ஷூ வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, குடியிருப்புவா்கள் பழைய பொம்மைகள், பள்ளி பைகள், காலணிகளை குப்பையில் வீசுகிறாா்கள், எனவே அதற்கு பதிலாக வங்கியில் நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பின்னா் அதை தேவைப்படுபவா்களுக்கு வழங்க பயன்படும். குறிப்பாக ஏழை பள்ளி குழந்தைகள், கோடை, குளிா்காலங்களில் வெறுங்காலுடன் இருக்கும் நிலையில் இது அவா்களுக்கு உதவும்.

இந்த யோசனைகள் ’தூய்மை இந்தியா’ நடைமுறைகளை ஊக்குவிக்கும். இது மாநகராட்சியின் தர வரிசை உயா்த்துவதற்கும் பயன்படும் என தெரிவித்தாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com