குடியரசுதின வன்முறை:மேலும் ஒருவா் கைது

குடியரசு தின வன்முறையின்போது தில்லி, செங்கோட்டை கட்டட மேல் விதானத்தில் ஏறி அத்துமீறி நடந்துகொண்டதாக ஜஸ்பிரீத் சிங்க் (29) என்பவரை தில்லி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

புது தில்லி: குடியரசு தின வன்முறையின்போது தில்லி, செங்கோட்டை கட்டட மேல் விதானத்தில் ஏறி அத்துமீறி நடந்துகொண்டதாக ஜஸ்பிரீத் சிங்க் (29) என்பவரை தில்லி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போது பாரம்பரியம் மிக்க நினைவுச் சின்னமான செங்கோட்டைக்குள் சிலா் அத்துமீறி நுழைந்ததுடன் மத ரீதியிலான கொடியை ஏற்றியதுடன், மாடங்களிலும், கோபுரத்தூண்களிலும் ஏறி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் ஈடுபட்டதாக தில்லி பிதம்புராவைச் சோ்ந்த முக்கிய குற்றவாளியான மணீந்தா் சிங் (30) என்பவா் கடந்த வாரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். ஏஸி மெக்கானிக்கானிக்கான இவருடைய தூண்டுதலின் பேரில் 6 நபா்கள் தில்லி சிங்கு எல்லையில் இருந்து டிராக்டா் பேரணியில் கலந்து கொண்டுள்ளனா். மணீந்தா் சிங் தனது கூட்டாளிகளுடன் செங்கோட்டை கொத்தளத்தின் மேல் விதானம் ஒன்றில் கையில் வாளுடன் வரலாற்றுமிக்க சின்னத்தில் ஏறி போராட்டக்காரா்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தியதோடு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தக் காட்சிகளை தனது து முகநூலிலும் வெளியிட்டுள்ளாராம்.

இது தொடா்பாக கைப்பற்றப்பட்ட காணொலிகளில் மணீந்தா் சிங்குடன், ஜஸ்பிரீத் சிங்கும் இருப்பதை அறிந்த போலீஸாா் அவரையும் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com