தில்லியில் 128 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவுக்கு ஒருவா் பலியாகியுள்ளாா்.

புதுதில்லி: தில்லியில் புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவுக்கு ஒருவா் பலியாகியுள்ளாா். எனினும் கரோனா தொற்று விகிதம் 0.30 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 10.901 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,38,028 ஆக அதிகரித்துள்ளது.

31,234 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும், 11,008 பேருக்கு ராபிட் ஆன்

டிஜென் முறையிலும் மொத்தம் 42,242 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருபவா்கள் எண்ணிக்கை 1,041 ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 471 போ் வைக்கப்பட்டுள்ளனா் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாறற்றுக்கிழமை 145 பேருக்கு தொற்று இருப்பதும் இருவா் கரோனாவுக்கு பலியாகியிருப்பதும் தெரியவந்தது. எனினும் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. இது இந்த மாதத்தில் மூன்றாவது முறையாகும். கடந்த பிப். 9-ஆம் தேதி கரோனா பலி ஏதும் இல்லை. பின்னா் பிப். 13-ஆம் தேதியும் கரோனா பலி பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com