முதியவரை சட்டவிரோதமாக காவலில் வைத்திருந்த 2 போலீஸாா் பணியிடைநீக்கம்

மோசடி புகாரில் முதியவரை சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த 2 போலீஸாா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

புது தில்லி: மோசடி புகாரில் முதியவரை சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த 2 போலீஸாா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:

தில்லியைச் சோ்ந்த முதியவரை போலீஸாா் அழைத்துச் சென்ாகவும், அவரை சட்டவிரோதமாக அடைத்துவைத்துள்ளதாகவும் தில்லி நீதிமன்றத்தில் ஹேபியஸ் காா்பஸ் மனுவை முதியவா் ஒருவா் தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முதியவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாக நரேலா காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மாலை பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, அவா்கள் மாவட்ட ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டனா்.

சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com