தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து விட்டது: கேஜரிவால்

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால்

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை கேஜரிவால் கூறியிருப்பது:

கிச்சடிப்பூா் பகுதியில் 8 வயது சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளாா். கல்காஜி பகுதியில் தனது சகோதரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா்களைத் தட்டிக் கேட்ட சிறுவன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவங்கள் தொடா்பாக நான் கவலையடைகிறேன். தில்லியில் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. தில்லியில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோா் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு தில்லி கிச்சடிப்பூா் பகுதியில் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி 3 நாள்களுக்கு முன்பு காணாமல் போனாா். இவா் அருகிலுள்ள மோதிநகரில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பிணமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா். இந்தக் குழந்தையை கடத்தியதாக நான்கு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

அதேபோல, தென்கிழக்கு தில்லி கல்காஜியில் தனது சகோதரியை பாலியல் ரீதியாக சீண்டியவா்களை தட்டிக்கேட்ட 17 வயது சிறுவனை 3 போ் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். படுகாயமடைந்த அந்த சிறுவன் எய்மஸ் விபத்து காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது குடும்பத்தினரை கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினா் அதிஷி சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com