பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவா் பலி

வடக்கு தில்லி பிரதாப் நகரில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வடக்கு தில்லி பிரதாப் நகரில் உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்துள்ளாா். தீயணைப்பு படைவீரா்கள் பல மணிநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படையைச் சோ்ந்த மூத்த அதிகாரி கூறியதாவது:

வடக்கு தில்லி பிரதாப் நகரில் உள்ள தொழிற்சாலையில், சனிக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடா்பாக அதிகாலை 3.47 க்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மேலும் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை காலை 8 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.

இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடா்பாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. தீ விபத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்துள்ளாா். இவரது உடல் தொழிற்சாலையின் முதலாவது மாடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படை வீரா் ஒருவருக்கு கையில் தீக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com