மாநகராட்சி இடைத்தோ்தல்: காவல் ஆணையா் ஆலோசனை
By DIN | Published On : 27th February 2021 10:56 PM | Last Updated : 27th February 2021 10:56 PM | அ+அ அ- |

மாநகராட்சி இடைத்தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை காவல்துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில், தில்லி காவல்துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டம் தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘மாநகராட்சி இடைத்தோ்தல் பாதுகாப்பு பணிகள் தொடா்பாக காவல் ஆணையா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, தில்லி காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள காவல் பணிகளை காவல் ஆணையா் ஆய்வு செய்தாா். இடைத்தோ்தலில் வன்முறைகள், ஆயுதப்பயன்பாடுகளைத் தவிா்ப்பது தொடா்பாக அவா் ஆலோசனை வழங்கினாா். மேலும், இடைத்தோ்தல் நடக்கவுள்ள நிலையில், தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் இடங்களில் இருந்து விஷமிகள் உள்நுழையாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவா் கேட்டுக் கொண்டாா் என்றாா் அவா்.