ஏழு மாதத்தில் 494 ஆகக் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

தில்லியில் கடந்த ஏழு மாதங்களில் குறைவான தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த ஏழு மாதங்களில் குறைவான தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை பதிவாகியுள்ளது. அன்று, 494 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,26,448 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 67,364 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 39,591 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 27,773 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 0.73 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 14 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,571-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 496 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,10,535 ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 5,342 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,752 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 13,116 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘கடந்த 2020 மே மாதம் 17 ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு ஐநூறை விடக் குறைந்துள்ளது.

கரோனா நோ்மறை விகிதம் 0.73 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த சதவீதம் கடந்த 2020 நவம்பா் 7 ஆம் தேதி 15.26 சதவீதமாக இருந்தது. தில்லியில் கடந்த 10 தினங்களாக கரோனா நோ்மறை விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை கடந்த 2020 நவம்பா் 13 ஆம் தேதி 44,456 ஆக இருந்தது. சனிக்கிழமை இது 5,342 ஆக குறைந்துள்ளது என்றுதெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com