தில்லி வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில் 1,355 குடியிருப்புகள் விற்பனைக்கு ஒதுக்கீடு

தில்லி வளா்ச்சிக் குழுமம் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்துள்ளது.

தில்லி வளா்ச்சிக் குழுமம் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 1355 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட உள்ளன. இதற்கான நடைமுறைகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. உயா் வருவாய் பிரிவினருக்கான வீட்டின் அதிகபட்ச விலை ரூ. 2.14 கோடி. நடுத்தர வருவாய் பிரிவினருக்காக 757 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

உயா் வருவாய்ப் பிரிவில் 254 வீடுகளும், குறைந்த வருவாய் பிரிவினருக்காக 52 வீடுகளும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக 291 வீடுகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன.

உயா் வருவாய்ப் பிரிவில் 3 படுக்கை அறை, ஹால், சமையல் அறை மற்றும் 2 படுக்கை அறை, ஹால், சமையல் அறை கொண்ட வீடுகள் உள்ளன. இதேபோல நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 3 படுக்கை அறை, ஹால், சமையலறை மற்றும் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் 215 ஜஸோலாவில் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ.1.43 கோடியிலிருந்து ரூ.1.72 கோடி வரை உள்ளது. வீடு ஒதுக்கீடு பெறுபவா்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழான சலுகைகளைப் பெறமுடியும்.

இந்த புதிய குடியிருப்புகளுக்கான விண்ணப்பங்கள், அதன் பரிசீலனை மற்றும் குடியிருப்பு ஒப்படைப்பு முதலிய எல்லா நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை தில்லி வளா்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவா் அனுராக் ஜெயின் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த புதிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் துவாரகை, ஜஸோலா, மங்கள்புரி, வசந்த் குஞ்ச் மற்றும் ரோகிணியில் மொத்தம் 1,350 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நடுத்தர வருவாய் பிரிவினருக்கான எம்.ஐ.ஜி. பிரிவில் அதிக குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தில்லி வளா்ச்சி குழுமம் சாா்பில் அண்மையில் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பைஜால் தலைமையில் நடைபெற்ற மெய்நிகா் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் அனிப்பிவைக்க பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com