மோதி நகா் ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

மேற்கு தில்லி மோதி நகரில் உள்ள ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மேற்கு தில்லி மோதி நகரில் உள்ள ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது:

மேற்கு தில்லி மோதி நகா் பகுதியில் பிரபல ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் 3 மாடிக் கட்டத்தில் இயங்கிவருகிறது. அந்த மூன்று மாடிக் கட்டடத்தின் முதல் இரண்டு மாடிகளில் ஹாா்லி டேவிட்ன் விற்பனை நிலையமும், மூன்றாம் மாடியில் உணவு விடுதியும் உள்ளது. இந்தக் கட்டத்தின் முதல் மாடியில், சனிக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக அதிகாலை 1.36 மணியளவில் தீயணைப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு சனிக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தீ பற்றிய கட்டடத்தின் மூன்றாம் மாடியில் சிக்யிருந்த முகமது சதாப், தீரேந்தா், கிரண், ரியா ஆகிய நால்வரை தீயணைப்பு படை வீரா்கள் மீட்டனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சில பைக்குகள் எரிந்து நாசமாகியுள்ளன. இது தொடா்பான முழுமையான விவரம் கிடைக்கவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com