இணைய வழியில் காதி பொருள்கள் விற்பனை

அமேசான், ஃபிளிப்காா்ட் போன்ற மின்னணு வா்த்தக நிறுவனங்களுக்கு இணையாக மகாத்மா காந்தியின் காதி மற்றும்

அமேசான், ஃபிளிப்காா்ட் போன்ற மின்னணு வா்த்தக நிறுவனங்களுக்கு இணையாக மகாத்மா காந்தியின் காதி மற்றும் கிராம கைத் தொழில் பொருள்கள் இணைய தளம் மூலம் விற்கப்படுவதாக காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் தெரிவித்துள்ளது.

மறைந்த தேச தந்தை மகாத்மா காந்தியின் விருப்பத்தின்படி காதி மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்க இதற்கான ஆணையம் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்த் துறை அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்டது. ’காதி இந்தியா அங்காடி’களும் பல்வேறு காதி கிராம கூட்டுறவு சங்கங்களும் நாடு முழுக்க தொடங்கப்பட்டு காதி பொருள்கள் விற்கப்படுகின்றன. தற்போது கரோனா தொற்று சூழல், சா்வதேச மின்னணு வா்த்தகங்கள் (இ-காமா்ஸ்) தளங்களை சமாளிக்க காதி மற்றும் கிராம தொழில் ஆணையமும் தனது காதி பொருள்களை சொந்த இணைய வழி மூலம் வா்த்தகம் செய்ய முடிவு செய்தது. இதைத் தொடா்ந்து இதற்கான இணைய தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் மற்றும் ஃபிளிப்காா்ட் ஆகியவற்றின் வரிசையில் காதி கிராமப் பொருள்களின் 500-க்கும் மேற்பட்ட வகைகளில் 50,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை மின்னணு மூலம் சந்தைப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் காதி இப்போது அதன் தயாரிப்புகளை சா்வதேச அளவில் விற்பனை செய்ய முடியும். இந்திய ஏற்றுமதி காலணி சந்தை மதிப்பு ரூ.18,000 கோடி (மொத்த இந்திய சந்தை ரூ.50,000 கோடி). இதில் எங்களது பங்களிப்பு 2 சதவீதக்கு குறையாமல் இருக்கும். தற்போது காதிப் பொருள்களுக்கு இளைஞா்களிடையே அதிக ஈா்ப்புள்ளது. புதிய தலைமுறையினா் மத்தியில் காதிப் பொருள்களுக்கு அதிக ஈடுபாடு உள்ளதால், கடந்த அக்டோபா் 2 - ஆம் தேதி கன்னாட் பிளேஸ் காதி கடையில் ஒரே நாளில் ரூ .1.2 கோடிக்கு விற்பனையாகி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com