முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சத்யேந்தா் ஜெயின்

தலைநகா் தில்லியில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தலைநகா் தில்லியில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் தடுப்பூசி கிடைத்ததும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி மூன்று கட்டங்களாகப் போடப்படும். முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 50 வயதுக்குக் கீழ் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். அதில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், 3 லட்சம் மருத்துவ ஊழியா்கள், 6 லட்சம் முன்களப் பணியாளா்கள் என 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com