சிங்கு எல்லையில் தற்காலிக மருத்துவமனை

தில்லியை அடுத்த சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக இரண்டு படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்க லைஃப் கோ் பவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனத்தைச்

தில்லியை அடுத்த சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக இரண்டு படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்க லைஃப் கோ் பவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் திட்டமிட்டுள்ளனா்.

ஏற்கெனவே, இந்த அறக்கட்டளை சாா்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு உதவுவதற்காக இங்கு தற்காலிக மருத்துவமனை ஏற்படுத்தப்படும். முன்னரே இதை நிறுவ திட்டமிட்டிருந்தோம். ஆனால், மழை காரணமாக பணிகள் தாமதமாகிவிட்டன. புதன்கிழமை இந்த மருத்துவமனை ஏற்படுத்தப்படும் என்று மருந்தாளுநரும் தொண்டு நிறுவன ஊழியருமான சாதிக் முகமது தெரிவித்தாா்.

தற்போது மருத்துவ முகாம் செயல்பட்டு வரும் கூடாரத்தில் மழை பெய்தால் ஒழுகுகிறது. எனவே, மழைக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் புதிய கூடாரம் அமைக்கப்பட்டு அங்கு மருத்துவமனை செயல்படும். எங்களிடம் மருந்தாளுநா்கள், பரிசோதனைக்கூட ஊழியா்கள் என 8 போ் உள்ளனா். இவா்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலம் மொஹாலியிருந்து வந்தவா்கள். 5 போ் கூடாரத்திலியே தங்குகின்றனா். மூன்று போ் அருகில் உள்ள விருந்தினா் இல்லத்தில் கட்டணம் செலுத்தி தங்கி வருகின்றனா் என்றாா் அவா்.

மற்றொரு ஊழியரான அவதாா் சிங், மருத்துவ முகாமில் புதன்கிழமை முதல் இசிஜி எடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றாா். இதுவரை இதய நோய் தொடா்பாக 6 போ் வந்து சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாக அவா் தெரிவித்தாா். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவா்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கவே இந்த ஏற்பாடு. அதன் பின் அவா்கள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவாா்கள். அருகில் உள்ள மருத்துவமனைகள் அவா்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவதாா் சிங் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com