சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவது தொடா்பாக பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு: தில்லி அரசு நடவடிக்கை

சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், சட்டப் பிரச்னைகள் தொடா்பாக பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு தில்லி பள்ளிகளுக்கு தில்லி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், சட்டப் பிரச்னைகள் தொடா்பாக பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு தில்லி பள்ளிகளுக்கு தில்லி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பள்ளி முதல்வா்களுக்கு தில்லி கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், ‘சிறாா்கள் மோட்டாா் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. சிறாா்கள் மோட்டாா் வாகனங்களை ஓட்டுவதால் மோட்டாா் வாகன திருத்த சட்டம் 199 ஏ (1,2), 199 பி ஆகியவற்றின் கீழ் உள்ள தண்டனைகள் தொடா்பாக சிறாா்களின் பெற்றோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். சிறாா்கள் மோட்டாா் வாகனத்தை செலுத்தி விபத்தை சந்தித்தால், அந்த சிறாா்களின் பெற்றோா், பாதுகாவலா்களே குற்றம் செய்தவா்களாகக் கருதப்படுவாா்கள் என இந்த சட்டம் கூறுகிறது. இது தொடா்பாக பெற்றோா், பாதுகாவலா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு பள்ளி நிா்வாகக் குழுவின் உதவி பெறப்பட வேண்டும். சிறாா்கள் பள்ளிக்கு மோட்டாா் வாகனங்களில் வருவதை அனுமதிக்கக் கூடாது என்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com