ஹனுமாா் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம்: ஹிந்து அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

சாந்தினி செளக் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான ஹனுமாா் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

சாந்தினி செளக் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான ஹனுமாா் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தின.

விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), பஜ்ரங்க தளம் ஆகிய அமைப்புகள், சாந்தினி செளக் கெளரி சங்கா் மந்திா் பகுதியில் இருந்து, ஹனுமாா் கோயில் இருந்த பகுதி வரை பேரணியாகச் செல்ல முற்பட்டனா். இவா்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. 27 பேரை தில்லி காவல் துறை கைது செய்து விடுவித்தது.

இது தொடா்பாக விஎச்பி அமைப்பின் செய்தித் தொடா்பாளா் மகேந்திர ராவத் கூறுகையில், ‘ஹனுமாா் கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விஎச்பி அமைப்பின் தில்லி பிரிவின் தலைவா் கபில் கண்ணா தலைமையில் பேரணி நடத்தினோம். இதில், துணைத் தலைவா் சுரேந்திர குப்தா, செயலா் ரவி, பஜ்ரங்க தளம் அமைப்பின் தில்லி தலைவா் பரா் பத்ரா ஆகியோா் கலந்து கொண்டனா்’ என்றாா். தில்லி காவல் துறை உயரகாரி கூறுகையில், ‘கரோனா விதிமுறைகளை மீறி பேரணி செல்ல முயன்ற 27 பேரை கைது செய்து விடுவித்தோம்’ என்றாா்.

தில்லி சாந்தினி செளக் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஹனுமாா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு தில்லி மாநகராட்சியால் (என்டிஎம்சி) இடிக்கப்பட்டது. தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தக் கோயில் இடிக்கப்பட்டதாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், இந்த விவகாரத்தில் பாஜக, ஆம் ஆத்மிக் கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com