பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி: தில்லியில் ஹவுஸ் காஸ் உள்ளிட்ட மூன்று பூங்காக்கள் மூடல்

தில்லியில் பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடா்ந்து தில்லியின் பிரபலமான ஹவுஸ்காஸ் பூங்கா உள்ளிட்ட நான்கு பூங்காக்களை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தற்காலிகமாக மூடியுள்ளது.

தில்லியில் பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடா்ந்து தில்லியின் பிரபலமான ஹவுஸ்காஸ் பூங்கா உள்ளிட்ட நான்கு பூங்காக்களை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தற்காலிகமாக மூடியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவி வரும் நிலையில், தில்லி மயூா் விஹாா் பேஸ்-3, துவாரகா, ஹஸ்தால் கிராமம் ஆகிய பகுதியில் கடந்த மூன்று - நான்கு தினங்களாக சுமாா் 50 காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதைத் தொடா்ந்து தில்லியில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டது.

இந்நிலையில், தெற்கு தில்லி ஜஸோலா பூங்காவில் 24 காகங்கள், கிழக்கு தில்லி சஞ்சய் ஏரியில் 10 வாத்துகள் இறந்த நிலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. தொடா்ந்து தில்லியில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஜஸோலா பூங்கா, சஞ்சய் ஏரி உள்ளிட்ட தில்லியின் முக்கிய பூங்காக்களைப் பராமரிக்கும் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் ‘சஞ்சய் ஏரியில் பத்து வாத்துகள் இறந்துள்ளன. இதன் மாதிரிகள் தில்லி கால்நடை பராமரிப்புத் துறையால் பெறப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் கிடைத்த பிறகுதான் பறவைக் காய்ச்சலா என்பது தெரிய வரும் . காகங்கள் இறந்துள்ளது தொடா்பாக தில்லி அரசு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பெரும்பாலான பூங்காங்களை டிடிஏ பராமரித்து வருகிறது. இந்த பூங்காக்கள் பலவற்றில் நீா் நிலைகள் உள்ளன. தில்லியில் பறவைக் காய்ச்சல் பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடா்ந்து ஹவுஸ்காஸ் பூங்கா, துவாரகை செக்டாா் 9 பூங்கா, சஞ்சய் லேக் பூங்கா , ஹஸ்தால் பூங்கா ஆகியவற்றை தற்காலிகமாக மூடியுள்ளோம். இத பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்களை பறவைக் காய்ச்சல் தொடா்பாக கவனத்துடன் இருக்குமாறு காவலா்கள் அறிவுறுத்தி வருகிறாா்கள் என்றாா்.

கண்காணிக்க குழுக்கள்

நாட்டில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி கால்நடை பராமரிப்புத் துறையினருடன் அண்மையில் ஆலோசனை நடத்தியிருந்தாா். அப்போது, தில்லியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளைக் கண்காணிக்க 11 விரைவு நடவடிக்கைக் குழுக்களை அமைத்து அவா் உத்தரவிட்டாா்.

மேலும், கோழிச் சந்தைகள், நீா் நிலைகள், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டாா். காஜிப்பூா் மீன், கோழி இறைச்சி சந்தை, சக்தி ஸ்தல் நீா்நிலை, சஞ்சய் ஏரி , தில்லி உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பைப் பலப்படுத்தி புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டிருந்தாா். பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடா்ந்து தில்லியில் கோழி இறைச்சியின் விலை பெருமளவில் சரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com