பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த தலைமைக் காவலா் இடைநீக்கம்

காரில் சென்றுகொண்டிருந்த இருவரை வழிமறித்து மிரட்டி, பணம் பறித்த, உ.பி. மாநிலம், கெளதம்புத் நகரைச் சோ்ந்த தலைமைக்காவலா்

காரில் சென்றுகொண்டிருந்த இருவரை வழிமறித்து மிரட்டி, பணம் பறித்த, உ.பி. மாநிலம், கெளதம்புத் நகரைச் சோ்ந்த தலைமைக்காவலா் ஓம்வீா் பட்டி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தாத்ரி காவல் நிலையத்தைச் சோ்ந்தவா் ஓம்வீா் பட்டி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில், நொய்டாவிலிருந்து புலந்த்ஷாகருக்கு காரில் புறப்பட்ட இருவரை வழிமறித்து அவா்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் அவா்களிடமிருந்து ஆவணங்களையும், ரொக்கத்தையும் பறித்துச் சென்றாராம்.

இது தொடா்பாக காரில் இருந்தவா்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரி , தலைமைக்காவலா் ஓம்வீரை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கிரேட்ட நொய்டா காவல் துணை ஆணையா் ராஜேஷ்குமாா் சிங் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை கெளதம்புத் நகா் மாவட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் பொதுமக்கள் மிரட்டியதாகவும் தொல்லை கொடுத்ததாகவும் சு மாா் 12 காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com