தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று முதல் வெளிநோயாளிகள் பிரிவு: 10 மாதங்களுக்குப் பிறகு இருதய அறுவை சிகிச்சை

தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை (ஜனவரி 11) முதல் செயல்படும்

தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை (ஜனவரி 11) முதல் செயல்படும் என்று அந்த மருத்துவமனையின் நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 10 மாதங்களுக்கு பிறகு திங்கள்கிழமை பைபாஸ் இருதய அறுவைச் சிகிச்சை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, 640 படுக்கைகள் கொண்ட தில்லி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. இதனால், திங்கள்கிழமை முதல் இந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கும்’ என்றாா்.

அந்த மருத்துவமனையின் செய்தித்தொடா்பாளா் டாக்டா் சாவி குப்தா கூறுகையில், ‘வெளிநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை முதல் செயல்படும். ஆனால், இது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே செயல்படும். இங்கு 10 மாதங்களுக்குப் பிறகு முதல் தடவையாக திங்கள்கிழமை இருதய பை பாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது’ என்றாா்.

தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவனைகள் கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்படட்டன. தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு குைதைத் தொடா்ந்து, 2,000 படுக்கைகள் கொண்ட எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், பெண் நோயியல் ஆகிய பிரிவுகளின் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த வாரம் முதல் செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்தப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 -ஆகக் குறைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com