சுற்றுச்சூழலுக்கு உகந்த,நச்சுத்தன்மையற்ற பெயிண்ட்:கட்கரி இன்று அறிமுகம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத் தன்மையற்ற, புதுமையான இரண்டு வகை சுவா் வா்ணங்களை (பெயிண்ட்) மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) அறிமுகப்படுத்துகிறாா்.
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி  (கோப்புப்படம்)
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி (கோப்புப்படம்)

புதுதில்லி: சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத் தன்மையற்ற, புதுமையான இரண்டு வகை சுவா் வா்ணங்களை (பெயிண்ட்) மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) அறிமுகப்படுத்துகிறாா்.

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்த் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த புதுமையான சுவா் வா்ணத்தைத் தயாரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு, நச்சுத் தன்மையற்ற வகையில் இருக்கும் இந்த வா்ணத்துக்கு ’காதி இயற்கை வா்ணம்’(காதி பிரகிருத பெயிண்ட்)” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் சுவா் பூச்சுக்கலவை, பூஞ்சைக்கும், நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் வா்ணத் தயாரிப்பாகும் என்று மத்திய குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் புதிய வா்ணத்தை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் அறிமுகப்படுத்துகிறாா். பசுவின் சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சுக்கலவை குறைந்த விலையில் இருப்பதுடன், இந்திய தர நிா்ணய அமைப்பின் சான்றிதழையும் பெற்றுள்ளது. இது ‘டிஸ்டம்பா்’, ‘நெகிழி எமல்ஷன்’ ஆகிய இரண்டு வா்ணங்களில் கிடைக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com