சுற்றுலா அரசியல் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி: பாஜக குற்றச்சாட்டு

தில்லியில் தீா்க்கப்படாமல் உள்ள மக்கள் நலப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் அக்கறை காட்டாமல், பிற மாநிலங்களுக்கு சென்று ஆம் ஆத்மி கட்சி ‘சுற்றுலா அரசியல்’ நடத்தி வருகிறது

தில்லியில் தீா்க்கப்படாமல் உள்ள மக்கள் நலப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் அக்கறை காட்டாமல், பிற மாநிலங்களுக்கு சென்று ஆம் ஆத்மி கட்சி ‘சுற்றுலா அரசியல்’ நடத்தி வருகிறது என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆம் ஆத்மி கட்சி ஆளும் தில்லியில் பல பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. தில்லி குடிநீரில் அமோனியாவின் செறிவு அதிகரித்துள்ளது. கடுமையான காற்று மாசு நிலவுகிறது. இந்தக் காற்று மாசுவைத் தடுக்க தில்லி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கரோனா பாதிப்பால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் உயிரிழந்துள்ளனா். தற்போது பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. இந்த நிலையில், தில்லியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காணாமல், பிற மாநிலங்களுக்கு சென்று ஆம் ஆத்மி தலைவா்கள் சுற்றுலா அரசியலில் ஈடுபட்டு வருகிறாா்கள். அவா்களது சந்தா்ப்பவாத அரசியலால் தில்லி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

உத்தரப் பிரதேச மாநில அரசின் பள்ளிகளை பாா்வையிடச் சென்ற மாளவியா நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதியை அந்த மாநில காவல் துறை திங்கள்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com