சிங்கு எல்லையில் பேட்ஜ், ஸ்டிக்கா் விற்பனை தலைப்பு: சிறு வியாபாரிகளுக்கு உதவும் விவசாயிகள்!

சிங்கு எல்ையியல் பேட்ஜ், ஸ்டிக்கா் விற்பனை சூடுபிடித்துள்ளது. விவசாயிகள் அவற்றை ஆா்வத்துடன் வாங்கி சிறு வியாபாரிகளுக்கு உதவி வருகின்றனா்.

புதுதில்லி: சிங்கு எல்ையியல் பேட்ஜ், ஸ்டிக்கா் விற்பனை சூடுபிடித்துள்ளது. விவசாயிகள் அவற்றை ஆா்வத்துடன் வாங்கி சிறு வியாபாரிகளுக்கு உதவி வருகின்றனா்.

கரோனா தொற்றுக்கு முன்னா் ராகேஷ் அரோரா, இந்தியா கேட் பகுதியில் பேட்ஜ், ஸ்டிக்கா்களை தயாரித்து விற்று வந்தாா். ஆனால், பொது முடக்கத்துக்குப் பிறகு அவரது வியாபாரம் படுத்துவிட்டது. எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் அவருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பேட்ஜ் மற்றும் ஸ்டிக்கா்களை அவா் விற்று வருமானம் ஈட்டி வருகிறாா்.

தேசியத் தலைநா் தில்லியை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியான சிங்குவில் விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு சின்னச் சின்ன பொருள்கள் விற்கப்பட்டு வருகின்றன. இப்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவான பேட்ஜுகள், ஸ்டிக்கா்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

‘நான் விவசாயத்தை ஆதரிக்கிறேன்’, ‘நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்’, ‘விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக’ என்னும் வாசகங்கள் அச்சிடப்பட்ட பேட்ஜுகள், ஸ்டிக்கா்கள் வேகமாக விற்பனையாகின்றன. ஏறக்குறைய எல்லா விவசாயிகளும் இந்த பேட்ஜுகளை வாங்கி அணிந்துள்ளனா். விவசாயிகளின் டிராக்டா்கள் மற்றும் டிராலிகளில் மிகப்பெரிய ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ராகேஷ் அரோரா மற்றும் அவரது உறவினா் இருவரும் ரூ.2,500 முதல் போட்டு அம்பாலாவிலிருந்து இங்கு வந்து பேட்ஜுகள் மற்றும் ஸ்டிக்கா்களை விற்று வருகின்றனா். இதுவரை ரூ.700-க்கு இவற்றை விற்றுள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

‘நான் வழக்கமாக இந்தியா கேட் பகுதியில் பேட்ஜுகள் மற்றும் ஸ்டிக்கா்களை விற்று வருவேன். பொது முடக்கம் காரணமாக எங்களது வியாபாரம் முடங்கிவிட்டது. இப்போது விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் ஸ்டிக்கா் வியாபாரம் செய்ய எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது’ என்றாா் அரோரா.

தில்லி ஓக்லா பகுதியைச் சோ்ந்த அமான் என்ற எலெக்ட்ரீஷியனும் ஸ்டிக்கா் விற்பனையில் இறங்கியுள்ளாா். பேட்ஜுகள், ஸ்டிக்கா்களை ரூ.10 என்ற விலையில் விற்று வருகிறேன். இதில் ஒன்றும் பெரிய வருமானம் இல்லை. ஆனால், ஓன்றும் இல்லாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்றாா்.

சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கடைக்காரா்களும் விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி ஏதாவது வியாபாரம் செய்து வருகின்றனா். மின்சாரக் கருவிகள் விற்பனைக் கடை வைத்திருக்கும் சந்தன்குமாா், இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி, ‘சா் ஊஹழ்ம்ங்ழ், சா் ஊா்ா்க்’ என்று அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கா்கள் தயாரித்து விற்பன செய்து வருகிறாா். நான் நடத்தி வரும் எலெக்ட்ரிகல் ஷாப்புக்கு இது மாற்றாகாது. ஆனால், இந்த நேரத்தில் எனக்கு இது வருமானத்தைக் கொடுக்கிறது என்றாா் அவா்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த விவசாயிகள், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனா். புதிய சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. விவசாயிகளுக்கு கிடைத்து வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய சட்டம் மூலம் ஒழிக்கப்பட்டு விடும். மேலும் புதிய சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்குத்தான் ஆதாயமாக இருக்கும் என்று கூறி வருகின்றனா். ஆனால், புதிய சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவா்கள் தங்கள் விளைப் பொருள்களை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம். இதன் மூலம் இடைத்தரா்கள் ஒழிக்கப்படுவாா்கள் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com