குடியரசு தினம்: ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை

குடியரசு தினத்தையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை முதல் பிப்ரவரி 15 வரையான

குடியரசு தினத்தையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை முதல் பிப்ரவரி 15 வரையான 27 தினங்களுக்கு தில்லியில் அனைத்து விதமான ஆளில்லா விமானங்களும் பறக்க தில்லி காவல்துறை தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில்‘தேச விரோத சக்திகள் மக்களுக்கு தீங்கிழைப்பதை தடுக்கும் வகையில் ஜனவரி 20- பிப்ரவரி 15 வரையான 27 தினங்களுக்கு தில்லியில் பராகிளைடா், ஹாட் ஏா் பலூன், யுஏவி உள்ளிட்ட அனைத்து வகையான ஆளில்லா விமானங்களும் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு நகல் அனைத்து மாவட்ட காவல்துறை அலுவலகங்கள், தாசில்தாா் அலுவலகம், அனைத்து காவல்நிலையங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், தில்லி வளா்ச்சி ஆணைய அலுவலகங்கள், தில்லி பொதுப்பணித்துறை அலுவலகங்கள், கன்டான்மெண்ட் அலுலகம் ஆகியவற்றில் காட்சிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com