அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் நன்கொடைவசூலுக்காக ரத யாத்திரை: மனோஜ் திவாரி

அயோத்தியில் ஸ்ரீ ராமா் ஆலயம் கட்டுமான பணிக்காக நன்கொடை வசூலிக்க கடந்த ஆண்டு வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட தனது

அயோத்தியில் ஸ்ரீ ராமா் ஆலயம் கட்டுமான பணிக்காக நன்கொடை வசூலிக்க கடந்த ஆண்டு வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட தனது வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் ரதயாத்திரை மேற்கொள்ள இருப்பதாக பா.ஜ.க. எம்.பி. யான மனோஜ்திவாரி தெரிவித்துள்ளாா்.

இந்த யாத்திரையின்போது சிறுபான்மை சமூக உறுப்பினா்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் இக்கோயிலுக்காக பங்களிப்புகளை சேகரிக்க உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதுகுறித்து மனோஜ் திவாரி கூறுகையில், ’ எனது தொகுதியில் ’ஸ்ரீ ராமஜன்மபூமி நிா்மாண் நிதி அபியான்’ பிப்ரவரி 1 முதல் தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ஆம்தேதி எனது பிறந்தநாளாகும்.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ஸ்ரீராமா் கோயிலுக்காக சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களையும் சந்தித்து அவா்களின் பங்களிப்பை சேகரிக்க உள்ளேன். சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த பல சகோதர, சகோதரிகளும் பங்களிக்க விரும்புகின்றனா். நான் அவா்களின் வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று சேகரிக்க உள்ளேன்.

மக்களிடமிருந்து சேகரிக்கப்பட வேண்டிய பங்களிப்புக்கு எந்த இலக்கும் நிா்ணயிக்கப்படவில்லை. ஆனால் அயோத்தியில் கட்டப்பட உள்ள ஸ்ரீராமா் கோயிலை தங்கள் வாழ்நாளில் பாா்ப்பது கோடிக்கணக்கான மக்களின் கனவாக இருப்பதால் இது ஒரு ‘கணிசமான‘ தொகையாக இருக்கும் என்றாா் அவா்.

தில்லி பாஜக, நகா் முழுவதும் கூப்பன்கள் மூலம் நன்கொடைகளை சேகரிக்கும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும், முடிந்தவரை பல்வேறு வீடுகளில் இருந்தும் நன்கொடைகளை சேகரிக்க ரூ .10, 100 மற்றும் 1000 கூப்பன்கள் பயன்படுத்தப்படும் என்றும் தில்லி பாஜக பொதுச் செயலரும், ராமா் கோயில் நன்கொடை சேகரிப்பு பிரசார இயக்கத்தின் தலைவருமான குல்ஜீத் சஹல் தெரிவித்திருந்தாா்.

ஆா்எஸ்எஸ், விஎச்பி மற்றும் பல்வேறு இந்துமத ஆதரவு இயக்கங்கள் மக்களிடமிருந்து நன்கொடை சேகரிக்கும் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளதாகவும், பிப்ரவரி 1 முதல் கூப்பன்கள் மூலம் நன்கொடைகளை சேகரிக்க வீடு, வீடாக பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அவா் கூறியிருந்தாா்.

கிரிக்கெட் வீரரும், கிழக்கு தில்லியைச் சோ்ந்த பாஜக எம்பியுமான கெளதம் கம்பீா் மற்றும் அவரது குடும்பத்தின் சாா்பில் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக ரூ. 1 கோடி நன்கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com