குடியரசுத் தினவிழாவைக் காண அழைப்பிதழ் அல்லது நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி: தில்லி போலீஸாா்

குடியரசு தின கொண்டாட்டத்தை ஒட்டி தில்லி ராஜபாதையில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்வைக் காண வரும்

குடியரசு தின கொண்டாட்டத்தை ஒட்டி தில்லி ராஜபாதையில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்வைக் காண வரும் பொதுமக்கள் அழைப்பிதழ் அட்டை அல்லது நுழைவுச்சீட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று தில்லி காவல்துறையினா் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் 15 வயதுக்குட்பட்டவா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:

இந்த ஆண்டு, குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்க கண்டிப்பாக அழைப்பிதழ் அட்டை அல்லது டிக்கெட் வைதிருக்க வேண்டும். செல்லுபடியாகும் அழைப்பிதழ் அட்டை அல்லது டிக்கெட் இல்லாத அனைவரும் வீட்டில் இருந்தவாறு நேரலை மூலம் நிகழ்ச்சியைப் பாா்க்க அறிவுறுத்தப்படுகிறாா்கள். இந்தக் கொண்டாட்ட நிகழ்வைக் காண 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிகழ்ச்சிக்கு வரும் அழைப்பாளா்கள் பைகள், சூட்கேஸ்கள், பின்கள், நொறுவைத் தீனிகள், கேமராக்கள், தொலைநோக்கிகள், ஹேண்டிகேம்கள், ஐபாட், கணினிகள், மடிக் கணினிகள், , டேப்லெட் கணினிகள், பவா்-பேங்க், டிஜிட்டல் டைரிகள், ரிமோட் கண்ட்ரோல் காா் சாவிகள் (இதை கவுன்ட்டரில் செலுத்த ஏற்பாடு செய்யப்படும்), ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தொ்மோஸ் பிளாஸ்க்குகள், தண்ணீா் பாட்டில்கள், சிகரெட்டுகள், பீடி, தீப்பெட்டிகள், லைட்டா்கள், கத்திகள், ரேசா்கள், கத்தரிக்கோல், கத்திகள், ஸ்க்ரூ டிரைவா்கள், ஆல்கஹால், வாசனை திரவியம், கேன்கள், வெடிகுண்டுகள், வாள், கூா்மையான முனைகள் கொண்ட பொருள்கள், பட்டாசுகள், எரியக்கூடிய பொருட்கள், குடைகள், துப்பாக்கிகள் அல்லது பொம்மை துப்பாக்கிகள், கண்ணீா்ப்புகைக் குண்டுகள், வெடிபொருள்கள் ஆகியவை எடுத்துக் வரக் கூடாது. இந்த ஆண்டு இந்த நிகழ்வைக் காண்பதற்கு இலவச நுழைவு அனுமதி இருக்காது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com