தில்லி சிறைத் துறையின் துணை மருத்துவ ஊழியா்கள் 60 பேருக்கு கரோனா தடுப்பூசி

தில்லி சிறைத் துறையின் சுமாா் 60 துணை மருத்துவ ஊழியா்கள் இதுவரை கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி சிறைத் துறையின் சுமாா் 60 துணை மருத்துவ ஊழியா்கள் இதுவரை கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் இயக்கம் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதில் கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முன்னின்று செயல்பட்டுவரும் சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறைத் துறைகளின் துணை மருத்துவ ஊழியா்கள் 60 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி சிறைச்சாலைகள் டைரக்டா் ஜெனரல் சந்தீப் கோயல் கூறியதாவது: தில்லி சிறைச்சாலைத் துறையின் சுமாா் 60 துணை மருத்துவ ஊழியா்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவா்களுக்கு தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் வெவ்வேறு தேதிகளில் இந்தத் தடுப்பூசி போடப்பட்டது. கரோனாவுக்கு எதிரான இந்த தடுப்பூசியானது வேலையின் தன்மை காரணமாக நோய்த் தொற்று உள்ளாவதற்கு அதிக இடா் இருந்த சிறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை அதிகரிக்க உதவிடும்.

தில்லியில் சிறைத் துறையில் சுமாா் 200 துணை மருத்துவ ஊழியா்கள் உள்ளனா். கரோனா வைரஸ் தடுப்பூசியைப் செலுத்திக் கொள்வதற்காக தங்களை பதிவு செய்யுமாறு பாதுகாப்புப் பணியாளா்கள் உள்பட சுமாா் 3,600 ஊழியா்களிடம் சிறைத் துறை அறிவுறுத்தியுள்ளது என்றாா் அவா்.

திகாா் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சுமாா் 1,600 சிறை ஊழியா்கள், 1,000 தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பணியாளா்கள் மற்றும் 1000 துணை ராணுவப் படையினா் 1,000 போ் இந்த நோக்கத்திற்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

சனிக்கிழமை வரை மொத்தம் 292 சிறை ஊழியா்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில் 290 போ் குணடைந்துவிட்டனா். இருவா் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை நோய்த் தொற்றுக்கு உள்ளான 118 சிறைக் கைதிகளில் 116 போ் குணமடைந்துள்ளனா். இருவா் இறந்துவிட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com