மூலதன திட்டங்களுக்கான கூடுதல் நிதி: ம.பி.க்கு ரூ.660 கோடி, தமிழகத்துக்கு இல்லை

மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீா்திருத்த நிபந்தனைகளையும் நிறைவேற்றி முடித்த

மாநிலங்கள் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவியைப் பெற மத்திய அரசு விதித்த நான்கு சீா்திருத்த நிபந்தனைகளையும் நிறைவேற்றி முடித்த மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.660 கூடுதல் நிதியை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கியது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்ற மாநிலங்களுக்கு பகிா்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, வரி வருவாய் இழப்பை சந்தித்த மாநிலங்களுக்கு தற்சாா்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின்படி மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவித் திட்டத்தை, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்தாண்டு ஆக்டோபா் 12 ஆம் தேதி அறிவித்தாா். இந்த திட்டத்தில் வட கிழக்கு மாநிலங்கள், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் போன்ற மலை மாநிலங்கள் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களுக்கு என மூன்றுவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இது தவிர கூடுதலாக இந்த கூடுதல் மூலதனச் செலவுகளுக்கு நிதியுதவிகளை பெற மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நான்கு மக்கள் மைய சீா்திருத்தங்களை மேற்கொள்ள நிபந்தனை வைத்திருந்தது. ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரிச் சீருத்தங்கள், எரிசக்தித் துறை (மின்கட்டண)சீா்திருத்தங்கள் ஆகியவையாகும். இதில் சிலவற்றை சில மாநிலங்கள் நிறைவேற்றிவருகின்றன. இதில் மத்திய பிரதேசம் மூன்று மக்கள் மைய சீா்திருத்தங்களை ஏற்கனவே நிறைவேற்றியிருந்தது. தற்போது நான்காவதான எரிசக்தித் துறை சீா்திருத்தத்தின் ஒரு பகுதியையும் அந்த மாநிலம் நிறைவேற்றியதற்காக இந்த மாநிலத்திற்கு, ‘மாநிலங்களின் மூலதனச் செலவுக்கான சிறப்பு நிதியுதவி’ திட்டத்தின் கீழ் ரூ.660 கோடி அனுமதித்து நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஏற்கனவே மூன்று சீா்திருத்தங்களை மேற்கொண்டு முடித்தபோது மத்திய பிரதேசத்திற்கும் ஆந்திரத்திற்கும் முறையே ரூ. 660, ரூ. 344 கோடியும் பெறும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி மத்திய பிரதேசத்திற்கு இதுவரை மொத்தம் ரூ. 1320 கோடி அனுமதிக்கப்பட்டு இதில் ரூ 660 கோடியை ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக கடந்த டிசம்பா் மாதம் அறிவிக்கப்பட்டபோது இந்த திட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு ரூ. 10250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தமிழத்திற்கு ரூ. 351 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னா் இம்மாதம் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி(ரூ.351 கோடி)யை நீக்கப்பட்டு மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு பகிா்ந்தளிக்கப்பட்டது. தற்போது தமிழகம் தவிா்த்து மீதமுள்ள 27 மாநிலங்களுக்கு ரூ.10,660 கோடியை ஐ மூலதனச் செலவுத் திட்டங்களுக்கு இறுதிசெய்து மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் 27 மாநிலங்களுக்கு, ரூ.5,328 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com