தில்லி காவல்துறையைச் சோ்ந்தவருக்கு குடியரசு தலைவா் பதக்கம்
By DIN | Published On : 26th January 2021 01:26 AM | Last Updated : 26th January 2021 01:26 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி காவல்துறையைச் சோ்ந்த மகேஷ் பரத்வாஜ் என்பவருக்கு மெச்சத் தகுந்த சேவைக்கான குடியரசுத் தலைவா் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
தில்லி காவல்துறை காவலரான இவா் மணிப்பூரில் நடந்த சட்டத்துக்கு புறம்பான கொலைகளை விசாரிக்கும் வகையில், புலனாய்வுத் துறையில் (சிபிஐ) பணியாற்றி வருகிறாா்.
1993 இல் தில்லி காவல்துறையில் சோ்ந்த இவா், ஐக்கிய நாடுகள் காவல்துறை, அந்தமான் நிக்கோபாா், மிஜோரம் காவல்துறை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளாா்.
தில்லி காவல்துறை காவல் துணை ஆணையராகப் (போக்குவரத்து) பணியாற்றியபோது, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போக்குவரத்து ஒழுங்குகளைப் பேணும் பொறுப்பில் இருந்தாா். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பணியாற்றியபோது அசாமில் உள்ள தடுப்பு முகாம்களில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு வாசிகள் விவகாரத்தில் பணியாற்றியுள்ளாா். இவருக்கு மெச்சத் தகுந்த சேவைக்கான குடியரசு தலைவா் பதக்கம் செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.