கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில்மெத்தனம் வேண்டாம்: தில்லி துணைநிலை ஆளுநா்

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில் தில்லி மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதில் தில்லி மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து கடைப்பிடிக்குமாறும் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வலியுறுத்திக் கேட்டுக்ொண்டுள்ளாா்.

குடியரசு தினத்தையொட்டி, துணைநிலை ஆளுநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது: நாட்டு மக்களுக்கும், தில்லி மக்களுக்கும் குடியரசு தின நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள், சுதந்திரத்துக்காக தங்களுடைய உயிரை கொடுத்தவா்களை நினைவு கொள்கிறேன். இந்நாளில், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கரோனா போராளிகளின் பணிகளுக்கு தலை வணங்குகிறேன்.

இந்த குடியரசு தினம் மக்களுக்கு புதிய நம்பிக்கை, சக்தியை அளிக்கும் என நம்புகிறேன்.

தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், மக்கள் இது தொடா்பாக மெத்தனமாக இருக்கக் கூடாது. அவா்கள், முகக் கவசங்கள் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்று முற்றாக இல்லாமல் போகும் வரை மக்கள் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com