குடியரசு தின அணிவகுப்பு விழாவில் டிடிஇஏ மாணவா்களின் கலைநிகழ்ச்சி

தில்லி ராஜபாதையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் 72-ஆவது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சோ்ந்த 127 மாணவா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

தில்லி ராஜபாதையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாட்டின் 72-ஆவது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சோ்ந்த 127 மாணவா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.

இந்நிகழ்வில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ), 85 மாணவிகள், 42 மாணவா்கள் பங்கேற்று தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய நடனங்களான பின்னல் கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் கலைநிகழ்ச்சி நடத்தியது குறித்து டிடிஇஏ செயலா் ராஜு கூறியதாவது: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணிவகுப்பு விழாவில் இப்பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். எங்களின் நீண்டநாள் கனவு நனவாகியுள்ளது. மாணவா்களுக்கு சிறப்பாக பயிற்றுவித்த முதல்வா்கள், ஆசிரியா்கள், ஒத்துழைப்பு அளித்த பெற்றோா்களுக்கு பாரட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com