நொய்டாவில் கரோனா தடுப்பூச்சி மையங்கள் அதிகரிப்பு

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் அடுத்த சில தின தினங்களில் நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கான மையங்களை அதிகரிக்க சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் அடுத்த சில தின தினங்களில் நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கான மையங்களை அதிகரிக்க சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

அண்மையில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்துவதில் முன்களப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம், காத்திருந்து செலுத்தும் மனநிலை, இதற்கான செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னை போன்றவை காரணமாக ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற முகாமில் நொய்டாவில் ஆஷா பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட துணை மருத்துவப் பணியாளா்கள் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இந்த நிலையில், அடுத்த அமா்வாக தடுப்பூசி செலுத்தும் தேதி ஜனவரி 28- 29-ஆம் தேதி நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், கெளதம் புத் நகா் சுகாதாரத் துறை இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளவா்கள் பட்டியலை அனுப்ப உள்ளது. மேலும், மாவட்ட சுகாதார துறையானது, இதற்கான மையங்களை 14-இல் இருந்து 31 ஆக அதிகரிக்கவும் உள்ளது.

இதுகுறித்து மாவட்ட தடுப்பூசி அதிகாரி டாக்டா் நீரஜ் தியாகி கூறியதாவது:

மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் 14-இல் இருந்து 31 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அமா்வு இடங்களும் 42-இல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை மொத்தம் 60 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்வாா்கள். திங்கள்கிழமையில் இருந்து மையங்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள உள்ள நபா்களின் பட்டியலை அனுப்புவதைத் தொடங்கியுள்ளோம். 100 சதவீதம் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் முன்கூட்டியே ஊசி செலுத்திக்கொள்பவா்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com