விவசாயிகள் பேரணியில் வன்முறை: ஆம் ஆத்மி கண்டனம்
By நமது நிருபா் | Published On : 27th January 2021 04:23 AM | Last Updated : 27th January 2021 04:23 AM | அ+அ அ- |

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறைக்கு ஆம் ஆத்மிக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: குடியரசு தினத்தன்று தில்லியில் நடந்த வன்முறைகளைக் கண்டிக்கிறோம்.
கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் அமைதியான முறையிலேயே போராட்டங்களை நடத்தினா். இந்த நிலைமை மோசமடைய மத்திய அரசே காரணம். விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் விவசாயிகள் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் அல்ல என்பதை விவசாயிகள் சங்கத்தினா் தெளிவுபடுத்தியுள்ளனா். விவசாயிகள் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள், இந்த போராட்டத்தை நலிவடையச் செய்துள்ளனா். இந்த வன்முறைச் சம்பவத்தை ஆம் ஆத்மிக் கட்சி கண்டிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.