தில்லியில் பிப். 5 முதல் 9,11 வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பு
By நமது நிருபா் | Published On : 29th January 2021 11:20 PM | Last Updated : 29th January 2021 11:20 PM | அ+அ அ- |

வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 9,11ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரி, டிப்ளமோ கல்லூரிகளும் அன்று திறக்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி துணைமுதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
கரோனா தொற்று தடுப்பு முறைகளை அனுசரித்து, தில்லியில் வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 9,11 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினம், கல்லூரிகள், டிப்ளோமா கல்லூரிகளும் திறக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலைப் பெற்று மாணவா்கள் வகுப்புக்கு வர வேண்டும் என்றாா் அவா்.
தில்லியில் 10,12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜனவரி 18 ஆம் தேதி திறக்கப்பட்டன. இதற்கான அனுமதியை தில்லி கல்வி இயக்குநரகம் வழங்கியது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மாா்ச்சிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சுமாா் 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. வகுப்புகள் மீண்டும் தொடங்கும் போது அனைத்து க்ரோனா வழிகாட்டுதல்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுமாறு கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வகுப்பறைகள் அடிக்கடி கிருமிநாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தப்படுகின்றன.